Pages

Subscribe:

Wednesday, March 14, 2012

Wi-Fi (வை-ஃபை) - பற்றி ஓர் அதிர்ச்சி தகவல்!




WI -FI  விரிவாக்கம் WIRELESS FIDELITY என்பதாகும்.
 
NETHERLAND இல் 1991 ஆம் ஆண்டு NCR & AT என்ற இரண்டு நிறுவன மூலம் உருவாக்கப்பட்டன WIRELESS FIDELITY என்பதாகும். WI–FI யின் தந்தை என அழைக்கப்பட்டவர் VIC HAYE’S ஆவார்.  இவர் IEEE802.11b மற்றும் 802.11aஎன்பதற்கு கீழ் இதை ஆரம்பித்தார். WIFI என்பது WLAN(WIRELESS LOCAL AREA NETWOEK)என்பதற்கு உரியதாகும்.

 சரி இப்ப விசயத்துக்கு வருவோம் 

லேப்டாப் (மடிக்கணனி)களில் Wi-Fi (வை-ஃபை) மூலம் இன்டர்நெட்டினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் (மடிக்கணனி)களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இக்கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ்வாராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் செல்ஃபோன்கள் (கையடக்கத்தொலைபேசி) மற்றும் லேப்டாப் (மடிக்கணனி) ஊடாகவும் Wi-Fi (வை-ஃபை) உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

Wi-Fi (வை-ஃபை) இல்லாமல் லேப்டாப் (மடிக்கணனி)யை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் Wi-Fi (வை-ஃபை)யை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர லேப்டாப் (மடிக்கணனி)களின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை லேப்டாப் (மடிக்கணனி)களை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


டிஸ்கி 
             மடி கணின்ன்னா மடிக்கிற கணினி , மடி மேல வச்சிக்கிற கணினி இல்லன்னு இப்பவாவது தெரிஞ்சிக்கிகங்க 



4 comments:

  1. அப்ப laptop நா என்ன அர்த்தம்கோ? ஆனாலும் நீங்கள் சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மை... சில வருடங்கள் முன்பு கைபேசிகளை இடுப்பு பகுதியில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டது நினைவுக்கு வந்தது... மடிக் கணினியை மடி மீது வைத்து வேலை செய்யும் பொழுது அதன் சூடு நம் தோலை வேக வைத்து half boil போட்டு விடுவதால் நோய் வரும் என்பது உண்மை

    ReplyDelete
  2. சூர்ய ஜீவா சார் எங்க ஆளே காணோம் , ட்விட்டர் பக்கமே வரது இல்லை

    ReplyDelete
  3. Nice info-

    Classiindia - Indian Online Free No.1 Classified Website - www.classiindia.com

    ReplyDelete
  4. Hi,

    My name is Neil Shaffer I’m the Affiliate Manager at BinaryOffers.com,
    The biggest Affiliate Network for Binary Options and Forex.

    I’d like to invite you to join us and you will enjoy

     The highest commissions in the industry !!!
     The best tracking system used by companies like Zynga and Sears !!!
     Dedicated affiliate manager that will work for you !!!
     And most important get paid on time, every time !!!

    I am available to you via email or Skype (aff.binaryoffers) for your convenience

    Thank you in advance for your response

    Best Regards,
    Neil Shaffer
    Neil@binaryoffers.com

    ReplyDelete