Pages

Subscribe:

Monday, November 28, 2011

மயக்கம் என்ன.? -சினிமா விமர்சனம் அல்ல


   காலைல ராசி பலன்ல சந்த்ராஷ்டமம்னு பாத்த உடனேயே உஷாராயிருக்கனும். ஆனா, வெவரம் பத்தாம வீட்டுக்காரம்மாகிட்ட வாங்கிக் கட்டறதுதான நம்ம பொழப்பே.!

   கடைலகூட பொண்ணுகள வேலைக்கு வச்சிக்கக் கூடாதுங்கறது அம்மிணி ஆர்டர். எல்லாம் நம்ம ஜொள்ளு விடறது தெரிஞ்சுதான். நம்ம மேல அவ்வளோ நம்பிக்கை.

  இன்னிக்கு காலைல கிளம்பும்போதே பக்கத்து ஃப்ளாட் ஏஞ்சல்,"அங்கிள் போற வழிலதான எங்க காலேஜ். என்னை கொஞ்சம் ட்ராப் பண்ணிடறீங்களா.?"-னு ஓடிவந்தா.

   'என்னடா கன்னிராசி இன்னிக்கு வொர்க் அவுட் ஆகுதே'-னு பாத்தா ஜன்னல்ல வூட்டுக்காரம்மா ஆட்டுன பூரிக்கட்டய பாத்ததும், "இல்லம்மா இன்னிக்கு மார்க்கட்ல கலக்சன் இருக்கு"-னு பொய் சொல்ல வேண்டியதாப் போச்சு.

   கிளம்பி மெயின் ரோட் சிக்னல்ல நின்னு கெளம்பும்போது தான் கவனிச்சேன், முன்னாடி போற ஸ்கூட்டில பொண்ணோட துப்பட்டா பின்வீல்ல மாட்டறா மாதிரி இருந்ததை.

   எச்சரிக்கலாம்னு ரெண்டுமூணு திருப்பமா துரத்திகிட்டுப் போயி, ஸ்கூட்டிய ஒருவழியா ஓவர்டேக் எடுத்து, "இந்தாம்மா..." என்று சொல்ல வாயெடுத்த போதுதான் அது நடந்தது.

   ”டமார்” ன்னு ஒரு சத்தம் வண்டி எதுலயோ மோதி நான் மயக்கம் போட்டிருந்தேன்.

      கண் விழிக்கும் போது ஏதோ ஹாஸ்பிடல் படுக்கையில் கிடந்தது தெரிந்தது.
அந்த ஸ்கூட்டி துப்பட்டா பொண்ணு யாருடனோ முதுகைக் காட்டிய படி, செல்லில் பேசிக்கொண்டிருந்தாள்.

   "கொஞ்ச தூரமாவே என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தாரு. நான் கொஞ்சம் பயந்துட்டேன். வண்டிய வேகமா ஓட்டிட்டு போக ட்ரை பண்ணினா, அப்பவும் வேகமா துரத்திட்டு வந்து ஏதோ சொல்ல ட்ரை பண்ணாரு. 



    அப்பத்தான் எதிர வந்த வண்டி மோதி இப்படி ஆயிடுச்சு. ஆமா, மம்மி ஹாஸ்பிடல் தான். வாங்க..!"-னு அவ ஃப்ரண்ட் யாருகிட்டயோ சொல்லிகிட்டே திரும்பும் போதுதான் பார்த்தேன். யப்பா... அப்படி ஒரு அழகி. வலியையும் தாண்டி பிரமிக்க வைக்கும் பேரழகு.


  ஃபோனை கட் செய்தபடி திரும்பியவள், நான் கண் விழித்திருப்பதை பார்த்ததும் சிரித்தபடி சொன்னாள்.

    "முழிச்சுட்டீங்களா.? இப்பத்தான் உங்க வீட்ல பேசிட்டு ஃபோனை கட் பண்றேன்.!" என்று அவள் சொல்லும் போதுதான் கவனிச்சேன். அவள் கையிலிருந்தது என் மொபைல்.

   அடி சண்டாளி... என் வைஃப்கிட்டயா இவ்வளவு நேரம் ஃபாலோ பண்ணாரு, ஏதோ சொல்ல டரை பண்ணாருனு விளக்கம் சொல்லிட்டிருந்த.? அய்யோ, இந்நேரம் என் வீட்லருந்து அவ எப்படி கிளம்பிட்டிருப்பானு நினைக்கும் போதே , எனக்கு எதுவும் மோதாமலேயே இன்னொரு தடவை மயக்கம் போட்டுட்டேன்.!

      செய்கூலி இல்லை ஆனா சேதாரம் தான் அதிகம் 

Thursday, November 24, 2011

நாங்களும் பிரபல ப்ளாக்ரா ஆவோம்ல

         நானும் ப்ளாக்கராயிட்டேன் , நானும் ப்ளாக்கராயிட்டேன் , கேட்டுக்கோங்க , சும்மா கிடந்த தேரை இழுத்து இப்படி நடு தெருவுல விடுவாங்கன்னு நினைச்சுக்கூடப்பாக்கல , இந்த வேதாளம்(ட்விட்டர்)  இருக்கானே அவன் கூட ஒரு நாள் மப்புல பேசிட்டு இருக்கும் போது அண்ணே நீங்க ஏன் ப்ளாக் எழுத கூடாதுன்னு கேட்டான். தம்பி அந்த அளவுக்கு அண்னன் வொர்த் இல்ல சும்மா சாம்பிராணி போடாதன்னு சொன்னான், சரி அவனுக்கு தெளிஞ்சா சரியாயிடும்ன்னு விட்டுட்டேன்.


          ஏற்கனவே ஒரு ஐந்து வருசத்துக்கு முந்தி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி அந்த ப்ளாக்காரனே கடுப்புல அதை ப்ளாக்(Block)  பண்ணுவான்னு நினைக்கல,  பின்ன பிட்டு படத்த ப்ளாக்ல போட்டா எவன் தான் ப்ளாக் (Block )பண்ணாம இருப்பான். 


                            சரி மேட்டருக்கு வருவோம்,  மேட்டர்ன்னா அது இல்ல ஜொள்ளு விட வேணாம். நான் சொன்னது இந்த விசயத்துக்கு வருவோம்ன்னு, சரி எழுத ஆரம்பிச்சா குறைந்தது ஒரு நாலு பேராவது புகழனும், இல்ல துப்பனும் , பிள்ளையார் சுழி போட்டு இருக்கேன், அதுக்காக ஆன்மீக ப்ளாக்கரா என்னை பாத்துடாதீங்க , நான் என்ன எழுத போறனோ , யார் யாருக்கு டரியல் ஆகப்போகுதோ தெரியாது , பொறுமையா என் பின்னாடி வாங்க 

                          செய் கூலி இல்லை சேதாரம் உண்டு