Pages

Subscribe:

Thursday, November 24, 2011

நாங்களும் பிரபல ப்ளாக்ரா ஆவோம்ல

         நானும் ப்ளாக்கராயிட்டேன் , நானும் ப்ளாக்கராயிட்டேன் , கேட்டுக்கோங்க , சும்மா கிடந்த தேரை இழுத்து இப்படி நடு தெருவுல விடுவாங்கன்னு நினைச்சுக்கூடப்பாக்கல , இந்த வேதாளம்(ட்விட்டர்)  இருக்கானே அவன் கூட ஒரு நாள் மப்புல பேசிட்டு இருக்கும் போது அண்ணே நீங்க ஏன் ப்ளாக் எழுத கூடாதுன்னு கேட்டான். தம்பி அந்த அளவுக்கு அண்னன் வொர்த் இல்ல சும்மா சாம்பிராணி போடாதன்னு சொன்னான், சரி அவனுக்கு தெளிஞ்சா சரியாயிடும்ன்னு விட்டுட்டேன்.


          ஏற்கனவே ஒரு ஐந்து வருசத்துக்கு முந்தி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி அந்த ப்ளாக்காரனே கடுப்புல அதை ப்ளாக்(Block)  பண்ணுவான்னு நினைக்கல,  பின்ன பிட்டு படத்த ப்ளாக்ல போட்டா எவன் தான் ப்ளாக் (Block )பண்ணாம இருப்பான். 


                            சரி மேட்டருக்கு வருவோம்,  மேட்டர்ன்னா அது இல்ல ஜொள்ளு விட வேணாம். நான் சொன்னது இந்த விசயத்துக்கு வருவோம்ன்னு, சரி எழுத ஆரம்பிச்சா குறைந்தது ஒரு நாலு பேராவது புகழனும், இல்ல துப்பனும் , பிள்ளையார் சுழி போட்டு இருக்கேன், அதுக்காக ஆன்மீக ப்ளாக்கரா என்னை பாத்துடாதீங்க , நான் என்ன எழுத போறனோ , யார் யாருக்கு டரியல் ஆகப்போகுதோ தெரியாது , பொறுமையா என் பின்னாடி வாங்க 

                          செய் கூலி இல்லை சேதாரம் உண்டு 

54 comments:

 1. >>பொறுமையா என் பின்னாடி வாங்க

  ஆமா, இவர் பெரிய ஃபிகரு

  ReplyDelete
 2. வந்துட்டோம் பாஸ் எங்கே போனாலும் விடமாட்டோம்ல

  ReplyDelete
 3. ஆரம்பமே அமர்க்களப்படுத்திட்டிங்க...சூ சூ ப்பரு.....

  ReplyDelete
 4. word verification எடுத்து விடுங்க கமெண்ட் போடுறது கஷ்டமா இருக்கும் எல்லோருக்கும்

  ReplyDelete
 5. ட்விட்டர் உலகின் புரட்சி புயலே தானை தலைவா உங்கள் பிளக் ஒரு கோடி ஹிட்ஸ் பெற்றிட வாழ்த்தி, ச்சா வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறோம்

  ReplyDelete
 6. மாதவா மதுசூதனா கேசவா புகுந்து விளையாடு ராசா.உன் அவதாரத்திற்கு எல்லை ஏது?

  ReplyDelete
 7. முதல் வரிகளே என்னை பிரமிக்க செய்கின்றன mark twain ஆட்டோபையோகிரபில் இந்த மாதிரி சில வரிகளை எடுத்து சொல்கிறார் //செய் கூலி இல்லை ஆனா சேதாரம் உண்டு// இதை படித்ததும் அந்த நினைவுகளே வந்தது ....//பின்ன பிட்டு படத்த ப்ளாக்ல போட்டா எவன் தான் ப்ளாக் (Block )பண்ணாம இருப்பான். // அண்ணே இது உங்கள் தவறு அல்ல பாசிச சூழ்ச்சி ஒரு உலக திரைபடத்தை தமிழன் தன் தளத்தில் போட கூடாது என்கிற முதலாளித்துவ செயல் ....இனி தமிழத்தில் புரட்சி பிறக்கட்டும் புதியோதோர் காரல் மார்க்ஸ் வளரட்டும் ......

  ReplyDelete
 8. அருமையான பிளாக் டெம்ப்ளெட். இதோ பின்னாடியே வருகிறேன். உங்களின் எழுத்துத் திறமையும், பிளாகும் வளர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. திருமாறன்.திNovember 24, 2011 at 2:25 PM

  பிள்ளையார் சுழிக்கே இவ்வளவு அலப்பரையா? ;))) வாழ்த்துகள். நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம் :)

  ReplyDelete
 10. கண்டிப்பா வந்துருவோம் :)
  கொலைவெறி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. ஹிஹி...நல்லாத்தான் போய் கிட்டு இருக்கு...தொடர்க...வளர்க!

  ReplyDelete
 12. வாழ்த்துக‌ள்.

  அனுப‌வ‌ஸ்தனா சொல்றேன்.. ட்விட்ட‌ர் ஆடிய‌ன்ஸூம் பிளாக் ஆடிய‌ன்ஸூம் வேற‌ வேற‌. 20% பேர் வேணும்ன்னா ரெண்டிலும் இருப்பாங்க‌. அத‌னால‌ இந்த‌ மாதிரி பேர‌ சொல்ற‌த‌ விட‌ ஃப்ரென்டுன்னு போட்டுடுங்க‌. வேதாள‌த்த‌ தெரியாத‌வ‌ங்க‌ளுக்கு இந்த‌ ப‌திவு ப‌டிக்க‌வே பிடிக்காது..

  அத‌னால் ட்விட்ட‌ர்ல‌ எழுத‌றோம்னு நினைச்சு எழுதாதீங்க‌.

  மீண்டும் வாழ்த்துக‌ள்

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் கேசவன்...
  வேலூரன் என்பதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும்...
  தொடர்க உங்கள் எழுது பனி.. ட்விட்டரில் கலக்குவது போல் இங்கேயும் ஜமாய்க்கவும்

  ReplyDelete
 14. இனிய துவக்கம்!! வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!!! கலக்குங்க!! நீங்க வேற ப்ளாக்லாம் ஓபன் பண்ணிட்டிங்க, எங்கள மாதிரி பெட்டிக்கடை வச்சிருக்கவன் நெலமை, என்ன ஆகுறது??? பார்த்து செய்ங்க!!

  ReplyDelete
 15. ஆரம்பமே அமர்களப்படுத்திட்டிங்க வாழ்த்துக்கள்.
  கலக்குஙக....

  ReplyDelete
 16. வாழ்த்துக‌ள்.
  பதிவு போட்டே மனுதர்களை கொலை பண்ணும் கழகத்துக்கு உங்களை வரவேற்கிறேன் :)

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. மன்மதகுஞ்சுNovember 24, 2011 at 3:28 PM

  பிள்ளையார் சுழியே அமர்க்களாம் இருக்கு மச்சி ... அப்பிடியே அமர்களப்படுத்து வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. முதல்ல வாழ்த்துகள் அண்ணா. அப்புறம் வரவேற்கிறேன். கார்க்கி அண்ணன் சொன்னதையும் மனசுல வச்சுக்கோங்க.:))

  ReplyDelete
 20. @ இளஞ்சிங்கம் :

  டாய்ய்ய்ய்ய்ய் :)))))))) உனக்கு குசும்பு ரொம்ப அதிகமாயிருச்சு :)))

  ReplyDelete
 21. ஸ்டார்ட் ம்யூசிக்..

  ReplyDelete
 22. நகைச்சுவையுடன் ஆரம்பம்.. :-))) வாழ்த்துகள் நண்பரே... தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
 23. வெல்கம்... வெல்கம்...

  ReplyDelete
 24. Opening ellam nalla than iruku.. Paapom

  ReplyDelete
 25. உருப்புடியா எழுதுன தானே comment போடுறதுக்கு

  ReplyDelete
 26. குவார்ட்டர அஷ்டு குப்புற கவுந்துகினே டைப் பண்ணியா மாமா..

  ReplyDelete
 27. @தல,

  என்னது இது... ஒரு அறிமுகத்துக்கே... 443 views 19 followers... முடியலை தல.... கலக்குங்க..

  நானும் ஒரு பிரபல ப்ளாக்கரோடு பேஜுக்கு வந்ததில் பெருமையடைகிறேன்..

  ReplyDelete
 28. all the besssssssstu....jokin

  ReplyDelete
 29. ரெண்டாவது பாரா சூப்பர். மறுவடி அதே மாதிரி ட்ரை பண்ணேன். பொழுது போவும்... ஹி ஹி

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள்!!


  இத்துடன் நிறுத்தாமல் வாரம் ஒ௫ பதிவாவது வெளியிடுங்கள்...பலர் முதல் பதிவை இப்படி தான் ஆரம்பித்து பின் பதிவேற்றுவதே இல்லை.

  ReplyDelete
 31. @nettai_

  முதல் பதிவிலேய சரக்க பத்தி எழுதி என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தமைக்கு நன்றி !!

  ReplyDelete
 32. @gundubulb

  வாழ்த்துக்கள் மச்சி.. ஆரம்பமே அசத்தலா இருக்கு...

  ReplyDelete
 33. என்னமோ போ மாதவா..கலக்கர..

  thanks,
  @g_for_guru

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் மாமா!

  ReplyDelete
 35. செய்கூலி உங்களுக்கு இல்லை..சேதாரம் எங்களுக்கு உண்டா? :-) தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
 36. உண்மைய சொல்லுங்க, ட்வீட்டர விட்டு கொஞ்ச நாள் மறைஞ்சு இருந்தது,பிளாக் ஆரம்பிக்கதானே! அறிமுகம் சரி, எங்கள ரெம்ப நாள் காக்க வைக்காதீங்க :-)

  ReplyDelete
 37. அண்ணே முதல் பதிவே அமர்களம் :-)),ஆனா ஒரே குறை ...அப்ப போட்ட பிட்டு படத்த இப்பவும் ஒரு ஓரமா போட்டுறுக்கலாம் :-))

  ReplyDelete
 38. யார் யாருக்கு டங்குவாரு கிழிய போதோ தெரியல.. ஆரம்பே சேதாரம் வேதாளத்திற்க்கு.. சூப்பரு அண்ணே நிறைய எழுதுங்க.. காத்திருக்கேன்.. உசாரைய்யா உசாரு.. ஓரஞ்சாரம் உசாரு..:-D:-D:-D

  ReplyDelete
 39. யோவ்! எழுதினது ஒரு பதிவு, அதுக்குள்ள 25 ஃபாலோவர்ஸ், 600 ஹிட்டு. இதெல்லாம் ஓவர்ய்யா. நாங்க முக்கிமுக்கு 430 பதிவு எழுதி இப்போதான் 100 பேர் ஃபாலோவிங், டெய்லி 50 ஹிட்டுக்கே முக்கி மொனகுது.

  சீக்கிரம் இந்த ப்ளாகும் ப்ளாக் ஆகக் கடவது.

  ஸ்டொமக் பர்னிங் மே போல்தாஹூ....

  ReplyDelete
 40. அற்புதமான படைப்பு! தமிழ் இனி வாழும் என்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விடுகிறது. பாராட்ட வார்த்தைகளே இல்லை. புல்லரிக்கிறது.

  ஆல் த பெஸ்ட்.

  (போதுமாய்யா?

  எல்லாம் சரி... இப்படி கமெண்ட் போடலைன்னா கொன்னுடுவேன்னு மிரட்டறதெல்லாம்கொஞ்சம் ஓவர்யா..)

  ReplyDelete
 41. வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
 42. சூப்பரு சூப்பரு blog-u தான் சூப்பரு .... ;)

  ReplyDelete
 43. நீங்கள் மேன்மேலும் பதிவுகள் போட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 44. வேலூர் வேங்கையே! பதிவுலகத்துக்கு வரவேற்கிறாம்!

  ReplyDelete
 45. நான் தான் கமெண்டே போடலியே. ;-)

  ReplyDelete
 46. முதலில் நீங்கள் ப்ளாக் ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்! முதல் பதிவு, முதல் தரமான பதிவு! ரசித்துப்படித்தேன்! மென்மேலும் இது போல் சிறப்பாக தொடர்ந்து எழுதுங்கள்! எதிர்பார்ப்பைத் தூண்டி ஏமாற்றாதீர்....வாரத்திற்கு ஒரு பதிவு அவசியம் எழுதுங்கள்....அனைவரும் மகிழும் வண்ணம் அமைய வாழ்த்துக்கள்....தமிழ் வாழ்க!

  ReplyDelete
 47. இவ்வளவு ஆதரவு கெடுத்து பிண்ணூட்டம் எழுதிய அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . இந்த அளவு எதிர்ப்பார்ப்பு இருக்கும் என்று நினைக்கவில்லை ஏதோ விளையாட்டாக தொடங்கி விட்டேன். இப்போழுது தான் தெரிகிறது நான் புலி வாலை பிடிக்கவில்லை , சிங்கத்தின் வாயில் என் தலையை விட்டு இருக்கிறேன் என்று. ப்ளாக் எழுதுவது என்பது அவ்வளவு எளிதான விசயம் இல்லை என்று இந்த பக்கத்தை தொடங்கிய பின் தான் தெரிந்தது , வழி நடத்தி செல்ல பல அனுபவஸ்தர்கள் உள்ளதால் இன்னும் பல பதிவுகள் வரும். மீண்டும் ஒரு நல்ல பதிவில் உங்களை சந்திக்கிறேன் . நன்றி

  ReplyDelete
 48. வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

  ஊருக்கு புதுசாம்ல

  ReplyDelete
 49. பிள்ளையார் சுழி போட்டு இருக்கேன், /

  வாழ்த்துகள்..

  ReplyDelete
 50. நானும் சேர்ந்திட்டேன் உங்க குரூப்ல

  ReplyDelete
 51. அண்ணே வாழ்த்துகள்! உங்க நகைச்சுவையை பதிவுலகத்திலும் தொடருங்கள்! :)

  ReplyDelete
 52. சேதாரம் ஜாஸ்தியாத்தான் இருக்கு....

  ReplyDelete
 53. தொடக்கமே...அருமை வாழ்த்துக்கள்..

  ஓட்டு பட்டை இனைக்க

  http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html

  ReplyDelete