Pages

Subscribe:

Monday, March 5, 2012

சனி நீராடு (ஒரு ஆய்வு கட்டுரை)

வாங்க நண்பர்களே சனி நீராடு பற்றி அலசுவோம்

      சில நாட்களாகவே சனி நீராடு என்ற சொல் அரோக்கியத்த பற்றி அக்கறை உள்ளவங்க அடிக்கடி சொல்லும் சொல்லா இருக்கிறது.

       அது என்ன சனி நீராடு , சனிக்கிழமை தான் குளிக்கனுமா, அதுவும் எண்ணை தேய்த்து மட்டும் தான் குளிக்கனுமா , இல்லை சனி கிழமை ஆனா டாஸ்மாக்ல போய் தண்ணியடிக்கிறத பற்றி சொல்றாங்களா என்ற குழப்பம் பலருக்கு உண்டு.

    சனி நீராடு பற்றி பல கருத்துகள் நிகழ்கிறது உலகில் , அது என்னன்னு பார்க்கலாம்.

1. சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளித்தல்

2. சனி கிரகம் மந்தமான கிரகம் அதனால பொறுமையா குளிக்கனும்.

3. அதெல்லாம் இல்லை சனி கிரகம் குளுமையான கிரகம் அதனால குளிர்ந்த நீரினால் குளிக்கனும்.

4. மேல சொன்னதெல்லாம் உண்மை இல்லை அதுக்கு அர்த்தமே வேற அப்படின்னு சொல்றவங்களும் இருக்காங்க

ஒன்னொன்னா பார்க்கலாம்

1. சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளித்தல்
                                                                                                சனிக்கிழமைகளில் நல்ல எண்ணைய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடைவதாக கூறுகிறார்கள்

2. சனி கிரகம் மந்தமான கிரகம் அதனால பொறுமையா குளிக்கனும்.

                                                                                                                                                ஒரு சிலர் என்ன சொல்றாங்கன்னா அவசர அவசரமா குளிக்கமா பொறுமையா உடல் அழுக்கு போகும் வரையில் குளிக்க வேண்டும் என்று குறிப்பதாக அமைகிறது, கிராமங்களில் ஒரு பழஞ் சொல் இருக்கிறது (அழுக்கு போக குளிச்சவனும் இல்ல , ஆசை தீர அணைச்சவனும் இல்லை ) , எனவே அழுக்கு போக குளிங்க

3. அதெல்லாம் இல்லை சனி கிரகம் குளுமையான கிரகம் அதனால குளிர்ந்த நீரினால் குளிக்கனும்.
                                                 நம்ப நாட்டு சீதோஷ்ன நிலைக்கு எப்பொழுதும் குளிர்ந்த நீரில் குளித்தால் தான், உடலுக்கு தேவையான சக்தியையும் என்றும் மாறா இளமையையும் கிடைக்கும்ன்னு சொல்லறாங்க சிலர் , குளிர்ந்த நீரில் குளிப்பது மதம் சார்ந்த நிகழ்வுல நாம கண் கூடா காண முடியும்

கடைசியாக
                           4. மேல சொன்னதெல்லாம் உண்மை இல்லை அதுக்கு அர்த்தமே வேற அப்படின்னு சொல்றவங்களும் இருக்காங்க 
                               அது என்னன்னா சனி நீராடு என்பது சனியை குறிப்பது இல்லை அசனி நீராடு என்ற சொல் தான் மறுவி சனி நீராடு என்று ஆகி விட்டது . அசனி என்றால் சாம்பிராணி இலையை குறிக்கும் சொல் , நீரில் சாம்பிராணி இலையை போட்டு குளிப்பதை அப்படி சொல்லியிருக்கலாம் என்று கூறுகின்றனர்

இந்த தலைமுறை பசங்க சனி நீராடுன்னா , சனிக்கிழமை மது அருந்துவதை தான் இப்படி சொல்லியிருக்காங்கன்னு நம்பறாங்க !

டிஸ்கி :-
                   சனி நீராடு சொன்ன ஒளவையார் வந்து விளக்கினா ஒழிய இப்படி ஆளாளுக்கு ஒரு அர்த்தம் பண்ணிக்க வேண்டியது தான்




                                               

8 comments:

  1. சனி நீராடுபவர்களைப்பார்த்து பொறாமைபட்டுள்ளேன்!(சந்தோஷமாக இருக்கும் கூட்டுக்குடும்பத்தில்தான் சனி நீராடுவது சாத்தியம் என்பதால்!) சனி பீராடுபவர்களைப்பார்த்து கோபப்பட்டுள்ளேன்!(லீவு நாளில், போயும் போயும் பீரா? )
    நீராடுவதை விட, ஜப்பானிய குளியல்தான் பிரமாதம்!
    ஜப்பான் ஔவையாரே என்னிடம் சொன்னதாக்கும்! :))

    ReplyDelete
  2. நான்கூட இத்தினி நாளா சனி நீராடு-ன்னா சனீஸ்வரனை குளிக்க சொல்றாங்களோன்னு நெனச்சிட்டு இருந்தேன்.. என் அறுவுக் கண்ணு, காது, மூக்கு அத்தனையையும் தொரந்துடீங்க அண்ணே..

    ReplyDelete
  3. அடம் பிடிக்கும் குழந்தையை பார்த்து தாய், "சனியனே, இன்னிக்கி சனிகிழமை லீவு நாள். இன்னிக்காவது குளி" ன்னு திட்னது எதிரொலி தான் சனி நீராடு

    ReplyDelete
  4. ஜப்பானிய குளியல் பற்றி சொன்னீங்கன்னா , தெரியாதவங்களுக்கு உபயோகமா இருக்கும்

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு ....வாழ்த்துகள் @shanthhi

    ReplyDelete
  6. Google-லில் இது பற்றி அறிந்துகொள்ளலாம்! அவர்களில் குளியல் அணுகுமுறை வித்தியாசமானது. நம்மைப்போல் குளித்துவிட்டு, நல்ல சூடான நீர்த்தொட்டிக்குள், சுமார் 20-30 நிமிடம் இருப்பார்கள். அந்த நீரை அசுத்தப்படுத்தாமல் பார்த்துக்கொள்வர்.

    ReplyDelete
  7. குளிக்காத ஆளுங்கள கொஞ்சம் திட்டுற மாதிரி "சனியனே.. நீராடு"னு சொல்லுவாங்கள்ல பாஸ்..
    செம... யா இருக்கு..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. பின்னூட்டம் இட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் , நெஞ்சார்ந்த நன்றிகள்

    ReplyDelete