Pages

Subscribe:

Thursday, March 1, 2012

ஒரு குட்டி(சின்ன)க்கதை

தலைப்பே வித்தியாசமா இருக்கேன்னு நினைக்காதீங்க !

         இது புத்தர் காலத்துல நடந்த கதை , புத்தரோட சிஷ்யர்கள் இரண்டு பேர் பயணம் செய்துக்கிட்டு இருந்தாங்களாம் , பயணம்ன்னா கார், பஸ் அந்த மாதிரி இல்லை துறவிகளோட தர்ம படி வண்டியில பயணம் செய்ய மாட்டாங்க , எங்க போனாலும் கால்நடையா தான் போவாங்க

       இப்படி போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு ஆற்றை கடந்து போக வேண்டி இருந்தது , அந்த ரெண்டு துறவில ஒருத்தர் வயசான ஆளு , இன்னொருத்தர் இளம் துறவி அதாவது நம்ப மொழில சொன்னா ஒருத்தர் சீனியர் , இன்னொருத்தர் ஜூனியர் ஆற்றை கடந்து போக தயாராகும் போது ஒரு இளம் பெண் அங்க வந்து அந்த துறவிங்க கிட்ட கேட்டாங்க ஐயா நானும் அடுத்த கரைக்கு போகனும் , என்ன அடுத்த கரைல விட முடியுமான்னு.

       உடனே இளம் துறவி எதுவும் பேசாம அந்த பெண்ணை தோள் மேல உக்கார வச்சிக்கிட்டு ஆத்துல இறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டாரு , மூத்த துறவிக்கு கோபமா வந்தது அத வெளிக்காட்டிக்காம அவரும் ஆத்துல இறங்க மூணு பேரும் அடுத்த கரைக்கு போய் சேர்ந்தாங்க .

    இந்த நிகழ்வுக்கு பிறகு , ரெண்டு நாளா மூத்த துறவி நிம்மதியா இல்லாம் மன உளச்சலுக்கு ஆளானா மாதிரி இருந்தாரு கடைசில அந்த இளம் துறவிக்கிட்ட , நீ எப்படி அந்த பெண்ண தோள் மேல தூக்கலாம் , இது துறவிங்களுக்கு அழகா, நம்ப மடத்துக்கு தெரிஞ்சா என்ன ஆகும், அப்படி ,இப்படின்னு இளம் துறவிய கடிச்சி துப்பாத குறையா திட்டினாரு , பொறுமையா கேட்ட இளம் துறவி ,மூத்த துறவிய பார்த்து சொன்னானாம்

  நான் அந்த பொண்ண ரெண்டு நாளைக்கு முன்னாடியே ஆத்தங்கரையிலேயே விட்டு வந்துட்டேன், நீங்க தான் ரெண்டு நாள மறக்காம மனசுக்குள்ள தூக்கிட்டு வந்து இருக்கீங்க, 

அந்த சம்பவம் நடந்த போது நாம மூணு பேர் மட்டும் தான் இருந்தோம், அந்த பெண்ணும் அங்கேயே இறங்கிடுச்சி, இப்ப நாம ரெண்டு பேருக்கு மட்டும் தான் இந்த விசயம் தெரியும் , வெளியுலகத்துக்கு சொன்னா நீங்க, இல்ல நான் தான் சொல்லனும்

போய் வேலையப்பாருங்கன்னு சொன்னானாம் இளம் துறவி

இப்ப தெரியுதா இவங்கள்ளா யாரு சீனியர் , யாரு ஜூனியர்ன்னு !

6 comments:

  1. சாட்டை அடி .........இது போல பல பெரியவங்க நல்லது பண்றேன் சரியா சொல்றேன்னு நடப்பதை தினமும் பார்க்கலாம்

    ReplyDelete
  2. அருமை. /// நான் அந்த பொண்ண ரெண்டு நாளைக்கு முன்னாடியே ஆத்தங்கரையிலேயே விட்டு வந்துட்டேன், நீங்க தான் ரெண்டு நாள மறக்காம மனசுக்குள்ள தூக்கிட்டு வந்து இருக்கீங்க /// செம்ம வரிகள்.

    ReplyDelete
  3. இந்த கதை தெரிந்ததுதான் !..புத்தர் காலத்து கதைன்னு சொல்லீட்டு பஸ், கார்ல போகலங்கறது லொள்ளுதான ? :-) ரெம்ப நாள் கழிச்சு எழுதி இருக்கீங்க............அடிக்கடி எழுதவும் !

    ReplyDelete
  4. நன்றி பிரபு,
    நன்றி ராஜக்குமாரியாரே ,
    நன்றி கருப்பு ,

    நன்றி அறிவு அண்ணா, ஏனுங்கன்னா மகாபாரத காலத்துலயே விமாணம் இருத்ததுங்களாம்ங்கண்ணா , புத்தர் காலத்துல கார் , பஸ் இருக்காதான்னு யாரும் கேட்டுடகூடதில்லிங்களா ? அதான் :-))

    நன்றி தும்ததா

    பின்னூட்டம் இட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

    ReplyDelete