Pages

Subscribe:

Wednesday, December 14, 2011

கண்ணாயிரம் எனது புதிய நண்பன்

     நண்பர் ஒருத்தர் போன்ல ஒரு அட்ரஸ் சொல்லி நான் இங்க தான் இருக்கேன் , வந்துடுங்கன்னு சொன்னாரு,  அவரு சொன்ன அட்ரஸ்ல போனா வாசல்ல எழுதியிருந்த பெயர் பலகை என்னை வியப்பில் ஆழ்த்தியது !

    கேட்ல நண்பர் பேரை சொன்ன உடனே கேட் திறந்து,  சார் லெப்ட்ல போய்ட்டு இரண்டாவதா வரும் பாருங்க அது தான் ஆபீஸ் ரூம்ன்னு சொன்னார் கேட்ல இருந்தவரு , அவருக்கு நான் நன்றி சொல்லிட்டு நண்பரை தேடிப் போனேன்,

    நண்பரும் இன்னொருவரும் பேசிட்டு இருந்தாங்க , ரெண்டு பேருக்கு வணக்கம் சொல்லிட்டு , நான் சொல்லுங்க சார்ன்னு சொன்னேன் , சார் இவருக்கு ஒரு கம்பியூட்டர் வேணுமாம் நல்லதா ஒன்னு பார்த்து கொடுங்க , விலையும் கம்மியா இருக்கனும் சொன்னாரு .

     அதுக்கு என்ன தாராளமா கொடுத்துடலாம்ன்னு சொல்லிட்டு அத பற்றி பேசி முடிச்ச பிறகு , மணி அடிக்கிற சத்தம் கேட்டது . நண்பர் சொன்னரு ஸ்கூல் பெல் அடிச்சிட்டாங்க வாங்க வெளில போய் பசங்கள பார்த்துட்டு வரலாம்ன்னு சொன்னார்.

    பசங்க ஒரே கூச்சல் ,  4 பேரா, 3 பேரா,  தோள் மேல கைய போட்டுக்கிட்டு போறத பாக்கும் போது எனக்கு வியப்பா இருந்தது , தனி தனியாவும் பசங்க விளையாடிட்டு இருந்தாங்க , அவங்கள பார்த்து ஒருத்தர் அப்ப அப்ப எச்சரிக்கை பண்ணிட்டு இருந்தாரு. புது கட்டிடம் கட்டிக்கிட்டு இருக்கிற இடத்துக்கு யாரும் போகாதீங்கன்னும் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

    ஆற்று மணல்ல பசங்க விளையாடறத பாக்கும் போது எனக்கும் அவங்க கூட விளையாடனும் போல இருந்தது, மொத்தம் ஒரு 25 - 30 பசங்க இருந்தாங்க , ஒருத்தன் மட்டும் யார் கூடவும் சேராம ஒரு மரத்த பிடிச்சிக்கிட்டு நின்னுட்டு இருந்தான் ,

தம்பி நீ விளையாட போகலியான்னு கேட்டேன் , இல்ல சார்ன்னு சொல்லிட்டு , நீங்க இங்க புதுசா இன்னைக்கு தான் வறீங்களான்னு சார்ன்னு கேட்டான் , ஆமாம் தம்பின்னு சொன்னேன்.

    சார் நான் கிறிஸ்மஸ்க்கு ஊருக்கு போக போறேன்னு சொன்னான் . அவன் வீட்டுக்கு போறத, அறிமுகம் இல்லாத என்கிட்ட சொல்லும் போது அவன் முகம் சந்தோசத்துல திளைச்சது . அப்ப தான் ஞாபகம் வந்தது அந்த ஸ்கூல்ல ஹாஸ்டல் இருக்கிற விசயம்.

    தம்பி சாப்ட்டியா , இல்ல சார் 2 மணிக்கு தான் சாப்பாட்டு நேரம்ன்னு சொல்லிட்டு , சார் நீங்க வண்டி வச்சியிருக்கீங்களான்னு கேட்டான் , ஆமாப்பா 2 வீலர் பஜாஜ் டிஸ்கவர்ன்னு சொன்னேன் . அவன் உடனே என்ன சிசி சார் உங்க வண்டின்னு கேட்டான் ,  நான் 135 சிசி தம்பின்னு சொன்னேன்,

    சார் என்னைய அந்த வண்டியில உக்கார வச்சி ஒரு ரவுண்ட் அடிப்பீங்களா, இது வரைக்கும் வண்டில நான் போனது இல்ல சொல்ல , எனக்கு பரிதாபமா இருந்தது நான் நண்பர கைய சீண்ட , அவர் கூட்டிட்டு போங்கன்னு சொன்னரு,  அவன வண்டியில ஒரு ரவுண்ட் அடிக்க அவன் போட்ட சந்தோச கூச்சலும் , ஆரவாரமும்,  எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ஆயிடுச்சி.

    ஒரு ரவுண்ட் முடிந்ததும், அந்த தம்பி வண்டிய விட்டு இறங்கி சார் ரொம்ப நன்றி சார், உங்கள நான் மறக்க மாட்டேன்,என் ப்ரண்டுகிட்ட எல்லம் சொல்லுவேன்னு சொன்ன பிறகு ,உங்க பேர் என்ன சார்ன்னு கேட்டான். தம்பி என் பேரு கேசவன் , உன் பேர் என்ன ? என் பேரு கண்ணாயிரம் சார். பேரை கேட்டவுடன் இதயம் கனத்தது

    சரி கண்ணாயிரம் நான் திரும்பவும் வரும் போது , உன்ன வெளியில ஒரு நாள்கூட்டிட்டு போறேன் சொன்ன உடனே அவன் முகத்துல 1000 வாட்ஸ் பிரகாசம் . அவனுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு நண்பருக்கும் சொல்லிட்டு வெளியே வந்தேன் .

    கேட்ல இருக்குறவர் வண்டி சத்தம் கேட்டுட்டு கேட்ட திறந்து விட்டு ஒரு வணக்கம் வச்சாரு அவருக்கு சத்தமா ஒரு வணக்கம் சொல்லிட்டு,  வெளியில வந்து வண்டிய நிறுத்தி , உள்ள நுழையும் போது பார்த்த அந்த பெயர் பலகை திரும்பி ஒருதரம் பார்த்தேன்.

பார்வை இழந்தோர் உண்டுஉறைவிடப்பள்ளி 

மனதில் நினைத்துக்கொண்டேன் அடிக்கடி இந்த பள்ளிக்கு வரவேண்டும் என்று 


டிஸ்கி :
              இது ஒரு உண்மை கதை.

              இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் , 
              பார்வை இழந்தவர்கள் , என்னை தவிர 
             

14 comments:

  1. கடைசி வரை எதிர்பார்போடு நகர்த்தி போனதற்கு வாழ்த்துக்கள். நல்லா இருந்தது.

    என் சொந்த கருத்து ஒன்னு, உண்மையை எழுதுவதால் (பதிவில்) மனதை நெருடலாம், ஆனால் உங்கள் கற்பனை சிறக்காது. முடிந்த வரை கற்பனை சேர்த்து எழுத்தையும் உங்களையும் வளப்படுத்தி எங்களையும் புது விடயங்களுக்கு அறிமுக படுத்துங்கள் .

    சரி என வாதடவில்லை,இது என் புரிதல். அவ்வளவே !

    ReplyDelete
  2. நெகிழவைத்த பதிப்பு வாழ்த்துக்கள்:-)

    ReplyDelete
  3. அட.. அண்ணனுக்கு காமெடி தான் வரும்ன்னு பாத்தா செண்டிமெண்ட்-லயும் கலக்கறீங்களே..

    நல்லாருக்குண்ணே.. தொடர்ந்து கலக்குங்க..

    ReplyDelete
  4. அடடா... (கண்ண) கலக்றியே மாம்ஸ்.

    ReplyDelete
  5. மாம்ஸ் "பார்வை இழந்தோர் உண்டுஉறைவிடப்பள்ளி" பதிவு அருமை அருமை அருமை !!

    ReplyDelete
  6. உண்மைலயே ரொம்ப நல்லார்க்கு ணா..

    ReplyDelete
  7. சூப்பர் கேசவன்! இந்த முறையும் ஆரம்பித்தவுடன் கடைசி வரை நிற்காமல் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டியது.கடைசி வரை பார்வை இழந்தவர்கள் என்று ஊகிக்க முடியவில்லை. பிழைகளும் கண்ணில் படவில்லை! தொடர்ந்து எழுதுங்கள்...என் ஆதரவு. இம்முறை இந்த பதிவை 10ம் வகுப்பு படிக்கும் என் மகனிடம் வாசித்துக் காட்டினேன். உங்களுக்கு இன்னும் ஒர் ரசிகர் கிடைத்தாயிற்று.

    ReplyDelete
  8. ரெம்ப அற்புதம்!!!!! சூப்பர்

    ReplyDelete
  9. What can I say? Feeling some what guilty.! Dont know the reason.! - Thoatta

    ReplyDelete
  10. நன்றி ரகு (சாட்டை),
    நன்றி மதன்,
    நன்றி குணா,
    நன்றி மாமே,
    நன்றி ரமேஷ்,
    நன்றி பிரகாஷ்,
    நன்றி அறிவுகரசு சார் ,
    நன்றி சண்முகம் (குல்ல புஜ்ஜி)
    நன்றி ஜெகன்

    ReplyDelete
  11. ஒரு முறை சென்னை பூந்தம்மல்ல்லி ல இருக்கும் பார்வை இழந்தோர் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சிறுவர்களுடன் விளையாடியது மறக்கமுடியாத ஒன்று, அப்போது கண்ணன் என்ன்கிற சிறுவன்க்கு ஸ்கூட்டி ஓட்ட சொல்லித்தந்தது ரொம்ப நல்ல பீலிங்கா இருந்தது,
    they requirre voluntars for recording the subject in a casetee and reading for them, and writing exam for them,

    ReplyDelete
  12. கண்பார்வையற்றவர்களூக்குள்ளேயுள்ள மனத்தின் நாடியை படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்,இவ்வாறே ஒவ்வுருத்தரும் நினைத்துவிட்டால் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அந்த மனிதர்களின் வாழ்வும் சந்தோசமானதாக இருக்கும், உணர்ச்சிகரமான படைப்பு

    ReplyDelete
  13. நன்றி பிச்சைக்காரன் !( மன்னீச்சூ )பெயர் தெரியலை,
    நன்றி குஞ்சு மச்சான்...
    பின்னூட்டம் இட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் .. :-)

    ReplyDelete