Pages

Subscribe:

Friday, December 9, 2011

” ஹப் ” இதுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?!

     வண்டிய எடுக்கும் போது தெரியாம போச்சு இந்த வண்டி இந்த அளவுக்கு இன்னைக்கு அடி வாங்க போகுதுன்னு , நானும் தான் !

    நண்பர் ஒருவர் நிலம் வாங்கும் விசயமா கூப்பிட்டு இருந்தாரு , 20 கி.மீ தூரத்துல இருக்கிற ஒரு ஊர் கிட்ட வந்துடுங்க போகலாம்ன்னு சொன்னாரு . சரி நான் வெட்டியா உட்கார்ந்துகிட்டு இருக்கிறது இவருக்கு தெரிஞ்சி போச்சு, போகலனைன்னா நல்லா இருக்காதுன்னிட்டு வண்டில கிளம்பிட்டேன்.

    இது வரைக்கு அந்த ஊருக்கு நான் போனது இல்ல , இது தான் முதல் தடவை , 10 கி.மீ தாண்டி போயிட்டு இருந்தேன், திடீர்ன்னு ஒருத்தன் வண்டி குறுக்கால வந்து நின்னான். வண்டிய நிறுத்தி ஏண்டா வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா திட்டினேன், இல்லைனே இனிமே தான் சொல்லனும்ன்னான், எனக்கு இன்னும் கோவம் அதிகமாயிடுச்சி .

      பக்கத்துல இருக்கிற வீட்ல ஒருத்தர் காலமாயிட்டாரு , அத சொல்லத்தான் போயிட்டு இருக்கேன். என்னை அந்த ஜங்சன்ல விட்டுங்க, கடைசி பஸ் அத பிடிக்கனும்ன்னு சொன்னான் ,  வழக்கமா நான் யாருக்கும் லிப்ட் கொடுக்கிறது இல்ல . முடியாதுன்னு சொன்ன , என்ன தள்ளிவிட்டு அவன் வண்டிய ஓட்டிட்டு போயிடுவான் போல இருந்தான்.

   என்ன ஏதுன்னு கேக்காமலேயே பின்னாடி ஏறி உட்கார்ந்துட்டு சார் போங்க சார் சீக்கிரம் , வண்டி போயிட போகுதுன்னு உத்தரவு போட்டான். நானும் எதுவும் பேசாம ஒரு உதவியா நினைச்சுக்கிட்டு வண்டிய கிளப்பினேன். 

           கொஞ்ச தூரம் போகல சார் சீக்கிரம் போங்க சார் , நான் நடக்கிற வேகத்துக்கு வண்டிய ஓட்டிட்டு இருக்கீங்கன்னு சொல்ல , நான் கோபமாகி தம்பி வேணும்னா நீ இறங்கி நடந்து போ , வேகமா என்னால ஓட்ட முடியாதுன்னு சொன்னேன். சார் கோவிச்சிகாதீங்க , பஸ் போயிடும் அதனால தான் அப்படி சொன்னேன்னான் , எனக்கும் கொஞ்சம் பரிதாபமா தான் இருந்தது .

       தம்பி இந்த ஏரியாக்கு நான் புதுசு , ரோடு எப்படி இருக்குன்னு தெரியாது , அதனால வேகமா போகமுடியாதுன்னு நான் சொல்ல ,  அதுக்கு அவன், நான் சொல்றேன் நீங்க ஓட்டுங்க சார்ன்னு சொன்னான். 

      வண்டி ஒரு 60 கி.மி. வேகத்துல போயிட்டு இருந்தது , சார் ”ஹப்” “ஹப்” சார் னான், நானும் வேகத்த கூட்டி ஒரு 70 க்கு வந்தேன் , அவன் திரும்பவும் சார் “ஹப்” ”ஹப்” கத்த , நான் திரும்பவும் வேகத்த கூட்ட, 80 கி.மி. வேக முள்ளு காட்டுச்சி , 

         வண்டி திடிர்ன்னு பறக்கறா மாதிரி ஒரு உணர்வு அவ்வளவு தான் தெரியும் வண்டி எங்களுக்கு முன்னாடி சங்கு சக்கரம் சுத்தறா மாதிரி சுத்திக்கிட்டு இருக்குது. ரெண்டு பேரும் தார் ரோட்டுல உருண்டுக்கிட்டு இருந்தோம் 
  
    ரெண்டு பேருக்கும் கை, கால் முட்டியேல்லாம் ஒரே சிராய்ப்பு , அவன் பின்னாடி உட்கார்ந்து இருந்ததால அவனுக்கு அடி அதிகம் , எனக்கு அந்த வண்டி பம்பர் கொஞ்சம் புண்ணியம் கட்டிக்கிச்சு 


      கோவமா அவன்கிட்ட போய் கேட்டேன் ஏண்டா நான் தான் இந்த பக்கம் முதல் தடவையா வரேன் , நீயாவது சொல்ல கூடாதா ” இங்க ஸ்பீட் பிரேக்கர்”  இருக்குதுன்னு நான் கத்த ,

  அவன் முனகிகிட்டே சார் நான் தான் “ஹப்”  “ஹப்” ன்னு கத்திக்கிட்டே வந்தேனே சார்! சொல்ல , 

                டேய்”ஹப்ன்ன”  உங்க ஊர்ல ஸ்பீட் பிரேக்காடா...

     செய் கூலி இல்லை ஆனா சேதாரம் தான் அதிகம் 


18 comments:

  1. இதுக்கு வண்டிய அவன் கிட்ட கொடுத்துட்டு பின்னால உக்காந்து போயிருக்கலாம்... ஹீ.ஹீ.. விதி யாரை விட்டது ??

    ReplyDelete
  2. என்ன மாம்ஸ் சவுக்கியமா இருக்கேளா

    ReplyDelete
  3. ந‌ல்ல‌ வேளை.. காதுல‌ த‌ப்பா விழுந்து எதுவும் செய்யாம‌ இருந்தீங்க‌ளே!!!

    ReplyDelete
  4. எல்லாம் ஒகே ..மாப்பி...ஆனா டெக்னிக்கலா ஒரு டவுட்..."அதெப்படி `சைக்கிளுக்கு`நீ ஸ்பீடோ மீட்டர் பிக்ஸ் பண்ணுன?"...;!!!

    ReplyDelete
  5. சார், கலக்கல்... விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்... சேதாரம் எவ்வளவு? உங்களுக்கு இல்ல, வண்டிக்கு

    ReplyDelete
  6. "டேய் கால்ரா கால்ரா"வை ஞாபகப்படுத்தினாலும் ரொம்ப இயல்பு உங்கள் பதிவு.
    கலக்குங்க...!!!

    ReplyDelete
  7. செம செம செம.! :))

    ReplyDelete
  8. சீரியசா படிச்சிட்டு வந்தேன் கடைசில சிரிக்க வச்சுட்டிங்களே

    ReplyDelete
  9. அண்ணே அடி பலமா..?

    ReplyDelete
  10. மாப்பு வெச்சிட்டான்டா ஆப்பு மாதிரி இருக்கு..ஒவ்வொரு பதிவிலும் சேதாரம் சாஸ்தி ஆகுது பார்த்து சூதானமா நடந்துக்குங்க ;-))

    ReplyDelete
  11. மன்மதகுஞ்சுDecember 9, 2011 at 4:14 PM

    இதை நம்ம ஊரில ரோட்டில "புட்டி" போட்டு வைச்சிருக்காங்க சொல்லுவம், புட்டின்னு சொன்ன கொஞ்சாம் உயரம்ன்னு அர்த்தம் இங்கே.. அதுசரி எனக்கென்னவோ இந்த ஆச்சிடன்ட் எல்லாம் பார்க்கும் போது நம்ம ரீல்ரேனுவோட மண்கவ்வல்களை நினைவு படுத்துதே..

    ReplyDelete
  12. அண்ணனின் புண்ணியத்தில் இன்று தெரிந்து கொண்ட இங்கிலிபீசு வார்த்தை ஹப்=ஸ்பீடு பிரேக்கர்.. நன்றிகள் ;-)))

    ReplyDelete
  13. போன பதிவு போலவே...உண்மையோ,பொய்யோ...ஆனா நல்லா எழுதுறீங்க கேசவன்.non-stop ஆக ஒரே மூச்சில் படிக்க க்கூடியது..ஒரு சில எழுத்துப் பிழைகள்...கவனிக்கவும்!

    ReplyDelete
  14. எனக்கு அர்த்தம் தெரிஞ்சு போச்சு......

    ReplyDelete
  15. //பக்கத்துல இருக்கிற வீட்ல ஒருத்தர் காலமாயிட்டாரு , அத சொல்லத்தான் போயிட்டு இருக்கேன். // சேதி சொல்ல போனவரு நிலைமையை இப்படி ஆக்கிட்டீங்களே... :)

    ReplyDelete
  16. உனக்கென்ற ஒரு தனி பாணி அமைக்கிறாய் என்று நினைக்கிறேன். நல்லாருக்கு. டெவலப் இட் பர்தர்.

    பான் வாயேஜ் மச்சி!

    ReplyDelete
  17. ஹா ஹா ஹா இன்னும் நிக்கலை பாஸ் சிரிப்பு ஹப்-ன்னா என்னா தெரியாத பச்சை புள்ளையா பாஸ் நீங்க??

    ReplyDelete