Pages

Subscribe:

Monday, November 28, 2011

மயக்கம் என்ன.? -சினிமா விமர்சனம் அல்ல


   காலைல ராசி பலன்ல சந்த்ராஷ்டமம்னு பாத்த உடனேயே உஷாராயிருக்கனும். ஆனா, வெவரம் பத்தாம வீட்டுக்காரம்மாகிட்ட வாங்கிக் கட்டறதுதான நம்ம பொழப்பே.!

   கடைலகூட பொண்ணுகள வேலைக்கு வச்சிக்கக் கூடாதுங்கறது அம்மிணி ஆர்டர். எல்லாம் நம்ம ஜொள்ளு விடறது தெரிஞ்சுதான். நம்ம மேல அவ்வளோ நம்பிக்கை.

  இன்னிக்கு காலைல கிளம்பும்போதே பக்கத்து ஃப்ளாட் ஏஞ்சல்,"அங்கிள் போற வழிலதான எங்க காலேஜ். என்னை கொஞ்சம் ட்ராப் பண்ணிடறீங்களா.?"-னு ஓடிவந்தா.

   'என்னடா கன்னிராசி இன்னிக்கு வொர்க் அவுட் ஆகுதே'-னு பாத்தா ஜன்னல்ல வூட்டுக்காரம்மா ஆட்டுன பூரிக்கட்டய பாத்ததும், "இல்லம்மா இன்னிக்கு மார்க்கட்ல கலக்சன் இருக்கு"-னு பொய் சொல்ல வேண்டியதாப் போச்சு.

   கிளம்பி மெயின் ரோட் சிக்னல்ல நின்னு கெளம்பும்போது தான் கவனிச்சேன், முன்னாடி போற ஸ்கூட்டில பொண்ணோட துப்பட்டா பின்வீல்ல மாட்டறா மாதிரி இருந்ததை.

   எச்சரிக்கலாம்னு ரெண்டுமூணு திருப்பமா துரத்திகிட்டுப் போயி, ஸ்கூட்டிய ஒருவழியா ஓவர்டேக் எடுத்து, "இந்தாம்மா..." என்று சொல்ல வாயெடுத்த போதுதான் அது நடந்தது.

   ”டமார்” ன்னு ஒரு சத்தம் வண்டி எதுலயோ மோதி நான் மயக்கம் போட்டிருந்தேன்.

      கண் விழிக்கும் போது ஏதோ ஹாஸ்பிடல் படுக்கையில் கிடந்தது தெரிந்தது.
அந்த ஸ்கூட்டி துப்பட்டா பொண்ணு யாருடனோ முதுகைக் காட்டிய படி, செல்லில் பேசிக்கொண்டிருந்தாள்.

   "கொஞ்ச தூரமாவே என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தாரு. நான் கொஞ்சம் பயந்துட்டேன். வண்டிய வேகமா ஓட்டிட்டு போக ட்ரை பண்ணினா, அப்பவும் வேகமா துரத்திட்டு வந்து ஏதோ சொல்ல ட்ரை பண்ணாரு. 



    அப்பத்தான் எதிர வந்த வண்டி மோதி இப்படி ஆயிடுச்சு. ஆமா, மம்மி ஹாஸ்பிடல் தான். வாங்க..!"-னு அவ ஃப்ரண்ட் யாருகிட்டயோ சொல்லிகிட்டே திரும்பும் போதுதான் பார்த்தேன். யப்பா... அப்படி ஒரு அழகி. வலியையும் தாண்டி பிரமிக்க வைக்கும் பேரழகு.


  ஃபோனை கட் செய்தபடி திரும்பியவள், நான் கண் விழித்திருப்பதை பார்த்ததும் சிரித்தபடி சொன்னாள்.

    "முழிச்சுட்டீங்களா.? இப்பத்தான் உங்க வீட்ல பேசிட்டு ஃபோனை கட் பண்றேன்.!" என்று அவள் சொல்லும் போதுதான் கவனிச்சேன். அவள் கையிலிருந்தது என் மொபைல்.

   அடி சண்டாளி... என் வைஃப்கிட்டயா இவ்வளவு நேரம் ஃபாலோ பண்ணாரு, ஏதோ சொல்ல டரை பண்ணாருனு விளக்கம் சொல்லிட்டிருந்த.? அய்யோ, இந்நேரம் என் வீட்லருந்து அவ எப்படி கிளம்பிட்டிருப்பானு நினைக்கும் போதே , எனக்கு எதுவும் மோதாமலேயே இன்னொரு தடவை மயக்கம் போட்டுட்டேன்.!

      செய்கூலி இல்லை ஆனா சேதாரம் தான் அதிகம் 

30 comments:

  1. இது தான் சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிறதா? நல்லா இருக்கு தல, டைட்டில் ரொம்ப பொருத்தம்

    ReplyDelete
  2. ஹா ஹா உண்மையிலேயே செம்ம காமெடி..:-) மனதில் தோன்றிய ஒரு கேள்வி "இது உண்மையா" என்பது..:-)

    ReplyDelete
  3. ஹா ஹா... சும்மா சொல்லகூடாது மாப்பி... நடந்தத மறைக்காம அப்படியே சொல்லிருக்க. உன் கூறு பாடு எங்களுக்கு மட்டும் தான் தெரியும். இனி உலகறியட்டும். சரி சரி மயக்கம் Part II போட மறந்துடாத... (யூ வீடு போயிங்... பூரிக்கட்டை அடி வாங்கிங்லாம்)

    ReplyDelete
  4. மாம்ஸ்...சூப்பர்...
    நல்ல முன்னேற்றம்..
    வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்...ஆனா படிக்க சொல்லி தொந்தரவு பண்ணக்கூடாது..
    .
    .
    .
    .
    .
    .

    பாரேன்.இந்த புள்ளை(பெ௫சு)க்குள்ளேயும் ஏதோ இ௫ந்தி௫க்கு

    ReplyDelete
  5. //அப்பத்தான் எதிர வந்த வண்டி மோதி இப்படி ஆயிடுச்சு. ஆமா, மம்மி ஹாஸ்பிடல் தான். வாங்க..!"-னு அவ ஃப்ரண்ட் யாருகிட்டயோ சொல்லிகிட்டே திரும்பும் போதுதான் பார்த்தேன். யப்பா... அப்படி ஒரு அழகி. வலியையும் தாண்டி பிரமிக்க வைக்கும் பேரழகு.//

    உங்களை அப்பா சொல்லாம சொல்லியிருக்கு அந்த பொண்ணு... :)

    ReplyDelete
  6. @mangai,

    உண்மையில்லாம இப்படியெல்லாம் எழுத முடியாதுன்னு நிணைக்கிறேன்.. :)

    ReplyDelete
  7. விதி மிக மிக மிக மிக வலியது ....

    ReplyDelete
  8. வாய்விட்டு சிரிக்க வைத்த பதிவு. எழுத்து நடை அருமை

    ReplyDelete
  9. கற்பனையோ, உண்மையோ சூப்பர் கேசவன். டைட்டிலும் நல்லா இருக்கு. நல்ல வேளை ட்வீட்டர்ல ஞாபக படுத்துனீங்க. ஒவ்வொரு தடவையும் அப்படியே செய்ங்க.

    ReplyDelete
  10. கடவுள் இருக்கறாரு கொமாரு.!
    இல்லைனா கடலை போடும்போது எஸ்கேப் ஆன க்ளாஸிக், ஹெல்ப் பண்ண போகும்போது மாட்டுவாரா.?

    ReplyDelete
  11. மாம்ஸ் சூப்பரு

    ReplyDelete
  12. சாச்சுப்புட்டா மச்சான்...ஹ.ஹ.சூப்பர்..மேலும் எழுதித் தள்ளுக..

    ReplyDelete
  13. ஆரம்பிச்சுட்டீங்க... உங்க அனுபவங்களையும் எழுதுங்க... எங்கள மாதிரி பசங்களுக்கு வழிகாட்டியா இருக்கும்...
    வாழ்த்துக்கள்.

    சாரி 4 லேட் கமிங்....

    ReplyDelete
  14. தல.. இவ்ளோ ஆனதுக்கு அப்புறம் இன்னும் தயக்கம் என்ன..?
    துப்பட்டாவ பத்தி எச்சரிக்க சேஸ் பண்ணிட்டு போனீங்களா..இல்ல அந்த பொண்ணு மூஞ்சி எப்படி இருக்குன்னு பாத்துடனும்னு போனீங்களா..?
    உண்மைய சொல்லுங்க..

    ReplyDelete
  15. குடும்ப ரகசியத்த வெளிய சொல்லலாமா பாஸ்..?

    ReplyDelete
  16. அருமையான இடுக்கை நண்பரே...

    வீட்டுல ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்டோ???

    ReplyDelete
  17. இதுவரை பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் நன்றி, இது ஒரு கற்பனைக்கதை தான் , சில நிகழ்வுகள் சுவாரசியங்களுக்காக எழுதியவை, பதிவு எழுதும் போதே தீர்மானித்தது தான் நகைச்சுவையை மட்டும் எழுதுவது என்று , எனவே இனி வரும் பதிவுகள் அனைத்தும் இது போல் தான் இருக்கும். ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மீண்டும் நன்றிகள் பல

    ReplyDelete
  18. ஹா ஹா ஹா ஹா சூப்பர் அங்கிள்ள்ள்ள்.... #சரி சரி கற்பனைன்னு நம்பிட்டோம் ;-)))

    ReplyDelete
  19. சூப்பர் ஆரம்பம்.தொடர்ந்து எழுதுங்கள் :)) @shanthhi

    ReplyDelete
  20. ஹி ஹி திருடா திருடி பட சீன் மாதிரியே இருக்கே?பட் நல்ல காமெடி நடை

    ReplyDelete
  21. மாம்ஸு கலக்கிடேல் போங்கோ ..!! @nettai_

    ReplyDelete
  22. அதெல்லாம் விடுங்க பொண்ணு கிட்ட நம்பர் வாங்கினிங்களா? //என் இனம்ய்யா நீர்//

    ReplyDelete
  23. சில நேரங்களில் மனம் ஆறுதல் அடைவது நகைச்சுவைகளில் தான்... அந்த வகையில் என்னை அறியாமல் சில நிமிடம் சிரித்துள்ளேன்.. நல்ல உரைநடை... நிறைய எழுதுங்க அண்ணா..முடிந்தால் வாழ்வியல் சார்ந்தும் எழுதுங்கள்... we expect more from you....வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. மன்மதகுஞ்சுNovember 29, 2011 at 10:35 AM

    இது உங்கவீட்டுக்கதை மட்டுமல்ல பல வீட்டில நடக்கிற கதைதான்... குடும்பஸ்தனோட அவஸ்தைகளை அப்பிடியே விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் வகையில் கண்முன்னே கொண்டு வந்தீங்க

    ReplyDelete
  25. அட்டகாசமான பதிவு!

    ReplyDelete
  26. நறுக்குனு நாளு ரிச் கேள பாக்கலாம்னா விடமாட்டாங்களே எதிரே வந்த வண்டியில மோதினதுக்கு அவ வண்டியில மோதி இருக்கலாம் ல ...... தல உங்க சேவை எங்களுக்கு தேவை நிறைய எழுதுங்க நாங்க யூஸ் பன்னிக்குறோம்.... ஐடியாவ சொன்னே.....

    ReplyDelete
  27. classic annaa....Adi nallaa vaanguneengalaa ?? Andha ponnu ungalukku madinjadhaa ?? Unga bike romba adi vaangirucchunu kelvipatten ... :-))

    ReplyDelete
  28. @udanpirappe ஏன்யா உண்மையை வெளியே சொல்ல முடியுமா , நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லை !

    ReplyDelete
  29. சூப்பர்! நல்ல நகைச்சுவை! ரசித்தேன். ப்ளீஸ் கண்டினியூ ;-))

    ReplyDelete