Pages

Subscribe:

Wednesday, March 14, 2012

Wi-Fi (வை-ஃபை) - பற்றி ஓர் அதிர்ச்சி தகவல்!




WI -FI  விரிவாக்கம் WIRELESS FIDELITY என்பதாகும்.
 
NETHERLAND இல் 1991 ஆம் ஆண்டு NCR & AT என்ற இரண்டு நிறுவன மூலம் உருவாக்கப்பட்டன WIRELESS FIDELITY என்பதாகும். WI–FI யின் தந்தை என அழைக்கப்பட்டவர் VIC HAYE’S ஆவார்.  இவர் IEEE802.11b மற்றும் 802.11aஎன்பதற்கு கீழ் இதை ஆரம்பித்தார். WIFI என்பது WLAN(WIRELESS LOCAL AREA NETWOEK)என்பதற்கு உரியதாகும்.

 சரி இப்ப விசயத்துக்கு வருவோம் 

லேப்டாப் (மடிக்கணனி)களில் Wi-Fi (வை-ஃபை) மூலம் இன்டர்நெட்டினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் (மடிக்கணனி)களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இக்கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ்வாராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் செல்ஃபோன்கள் (கையடக்கத்தொலைபேசி) மற்றும் லேப்டாப் (மடிக்கணனி) ஊடாகவும் Wi-Fi (வை-ஃபை) உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

Wi-Fi (வை-ஃபை) இல்லாமல் லேப்டாப் (மடிக்கணனி)யை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் Wi-Fi (வை-ஃபை)யை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர லேப்டாப் (மடிக்கணனி)களின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை லேப்டாப் (மடிக்கணனி)களை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


டிஸ்கி 
             மடி கணின்ன்னா மடிக்கிற கணினி , மடி மேல வச்சிக்கிற கணினி இல்லன்னு இப்பவாவது தெரிஞ்சிக்கிகங்க 



Monday, March 5, 2012

சனி நீராடு (ஒரு ஆய்வு கட்டுரை)

வாங்க நண்பர்களே சனி நீராடு பற்றி அலசுவோம்

      சில நாட்களாகவே சனி நீராடு என்ற சொல் அரோக்கியத்த பற்றி அக்கறை உள்ளவங்க அடிக்கடி சொல்லும் சொல்லா இருக்கிறது.

       அது என்ன சனி நீராடு , சனிக்கிழமை தான் குளிக்கனுமா, அதுவும் எண்ணை தேய்த்து மட்டும் தான் குளிக்கனுமா , இல்லை சனி கிழமை ஆனா டாஸ்மாக்ல போய் தண்ணியடிக்கிறத பற்றி சொல்றாங்களா என்ற குழப்பம் பலருக்கு உண்டு.

    சனி நீராடு பற்றி பல கருத்துகள் நிகழ்கிறது உலகில் , அது என்னன்னு பார்க்கலாம்.

1. சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளித்தல்

2. சனி கிரகம் மந்தமான கிரகம் அதனால பொறுமையா குளிக்கனும்.

3. அதெல்லாம் இல்லை சனி கிரகம் குளுமையான கிரகம் அதனால குளிர்ந்த நீரினால் குளிக்கனும்.

4. மேல சொன்னதெல்லாம் உண்மை இல்லை அதுக்கு அர்த்தமே வேற அப்படின்னு சொல்றவங்களும் இருக்காங்க

ஒன்னொன்னா பார்க்கலாம்

1. சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளித்தல்
                                                                                                சனிக்கிழமைகளில் நல்ல எண்ணைய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடைவதாக கூறுகிறார்கள்

2. சனி கிரகம் மந்தமான கிரகம் அதனால பொறுமையா குளிக்கனும்.

                                                                                                                                                ஒரு சிலர் என்ன சொல்றாங்கன்னா அவசர அவசரமா குளிக்கமா பொறுமையா உடல் அழுக்கு போகும் வரையில் குளிக்க வேண்டும் என்று குறிப்பதாக அமைகிறது, கிராமங்களில் ஒரு பழஞ் சொல் இருக்கிறது (அழுக்கு போக குளிச்சவனும் இல்ல , ஆசை தீர அணைச்சவனும் இல்லை ) , எனவே அழுக்கு போக குளிங்க

3. அதெல்லாம் இல்லை சனி கிரகம் குளுமையான கிரகம் அதனால குளிர்ந்த நீரினால் குளிக்கனும்.
                                                 நம்ப நாட்டு சீதோஷ்ன நிலைக்கு எப்பொழுதும் குளிர்ந்த நீரில் குளித்தால் தான், உடலுக்கு தேவையான சக்தியையும் என்றும் மாறா இளமையையும் கிடைக்கும்ன்னு சொல்லறாங்க சிலர் , குளிர்ந்த நீரில் குளிப்பது மதம் சார்ந்த நிகழ்வுல நாம கண் கூடா காண முடியும்

கடைசியாக
                           4. மேல சொன்னதெல்லாம் உண்மை இல்லை அதுக்கு அர்த்தமே வேற அப்படின்னு சொல்றவங்களும் இருக்காங்க 
                               அது என்னன்னா சனி நீராடு என்பது சனியை குறிப்பது இல்லை அசனி நீராடு என்ற சொல் தான் மறுவி சனி நீராடு என்று ஆகி விட்டது . அசனி என்றால் சாம்பிராணி இலையை குறிக்கும் சொல் , நீரில் சாம்பிராணி இலையை போட்டு குளிப்பதை அப்படி சொல்லியிருக்கலாம் என்று கூறுகின்றனர்

இந்த தலைமுறை பசங்க சனி நீராடுன்னா , சனிக்கிழமை மது அருந்துவதை தான் இப்படி சொல்லியிருக்காங்கன்னு நம்பறாங்க !

டிஸ்கி :-
                   சனி நீராடு சொன்ன ஒளவையார் வந்து விளக்கினா ஒழிய இப்படி ஆளாளுக்கு ஒரு அர்த்தம் பண்ணிக்க வேண்டியது தான்




                                               

Friday, March 2, 2012

அய்யய்யோ அது என்ன ஆச்சோ ?

ஙே....  ன்னு விழிக்காதீங்க தலைப்ப பார்த்து , இதுவும் ஒரு “குட்டி” கதை தான் !

       இமயமலையல ஒரு சாமியார் ரொம்ப பிரபலமா இருந்தாரு, அவருக்கு ஏகப்பட்ட மவுசு, எல்லாம் தெரிஞ்சவர், காலத்தை கடந்தவர் , மகா ஞானி இப்படி எல்லாம் அவர பார்த்தவங்க சொல்லுவாங்க !

     அவருக்கிட்ட ஏராளமான சிஷ்ய கோடிங்க இருந்தாங்க! சாமியார் ஆழ்நிலைல (தியானம், இல்ல பயிற்சின்னு வச்சிக்கலாம்)  ,  இருக்கும் போது திடீர்ன்னு , ” அய்யய்யோ அது என்ன ஆச்சோ ” அப்படின்னு சொல்லிட்டு அழ ஆரம்பிச்சிடுவாராம் , அவரு கூட இருந்த சிஷ்யர்களுக்கு ரொம்ப நாளா ஒன்னும் விளங்கலையாம் என்ன ஆச்சு சாமியாருக்கு  இவரு அடிக்கடி இப்படி அழ ஆரம்பிச்சிடுறாரேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாங்க

        ஒரு நாள் ஒரு சிஷ்யன் வந்து குருவே எனக்கு ஒரு மாசம் வெளியில போக அனுமதி வேணும், வீட்டு ஞாபகம் வந்துடுச்சி அனுமதி தரனும்ன்னு கேட்டானாம் , அதுக்கு குருவும் வீட்டு ஞாபகம் வந்தவன ஆசிரமத்துல வச்சிக்கிட்டா நல்லா இருக்காதுன்னிட்டு போயிட்டு , நீ விரும்பும் போது வா அப்படீன்னு சொல்லி அனுப்பி வச்சாராம் .

        ஒரு மாதம் கழிச்சு அந்த சிஷ்யனும் ஆசிரமத்துக்கு வந்தானாம், இப்படி ஒரு நாள் குரு ஆழ்நிலைல இருக்கும் போது “ அய்யய்யோ அது என்ன ஆச்சோ “ அப்படீன்னு சொல்லி அழ ஆரம்பிச்சாராம் , உடனே ஊருக்கு பேன சிஷ்யன் எழுந்து ,

      குருவே அதுக்கு இப்ப 19 வயசு ஆகுது , காலேஜ்ல படிக்குது நல்லா தான் இருக்குது அத பத்தி இனி நீங்க கவலைபடவேணாம் ” , அப்படின்னு சொன்னானாம் , உடனே குருவுக்கு ஒன்னும் புரியல , என்ன சொல்ற சிஷ்யான்னு கேட்டாராம் , அதான் குருவே நீங்க அடிக்கடி சொல்லி அழறீங்களே ” அய்யய்யோ அது என்ன ஆச்சோ “ அது தான் குருவேன்னு சொன்னாம்! அப்படியே ஷாக் ஆயிட்டாராம் குரு !

     சிஷ்யன் சொன்னானாம் , ஒரு மாசம் வெளிய போனது உங்களுக்காக தான் , உங்க வரலாறு & புவியியல் எல்லாம் விசாரிச்சிக்கிட்டு உங்க ஊருக்கு போயி உங்க மனைவிய சந்திச்சேன். அவங்க கிட்ட உங்கள பத்தி சொல்லிட்டு, குரு அடிக்கடி இப்படி பொலம்பராரு “ அய்யய்யோ அது என்ன ஆச்சோ “ அதப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டான்,

    அதுக்கு உங்க சம்சாராம் சொன்னாங்க பாவி மனுசன் கடன் தொல்லையால நான் நிறை மாத கர்பிணியா இருக்கும் போது என்னை அம்போன்னு விட்டுட்டு ஓட்டிட்டான் ,  போயி சொல்லு தம்பி அதுக்கு 19 வயசு ஆகுது , காலேஜ் படிக்குதுன்னு சொல்லு உங்க துப்புக்கெட்ட குருக்கிட்ட , இது தான் குருவே நடந்துன்னு சொன்னானாம் சிஷ்யன்,

    உடனே அந்த குரு அந்த சிஷ்யன் கால்ல விழுந்துட்டாராம் !


     இதுல இருந்து என்ன தெரியுதுன்னா , யார் யாருக்கு என்ன புரிஞ்சதோ நீங்களே அர்த்தம் பண்ணிங்கோங்க ! ஙே.............






Thursday, March 1, 2012

ஒரு குட்டி(சின்ன)க்கதை

தலைப்பே வித்தியாசமா இருக்கேன்னு நினைக்காதீங்க !

         இது புத்தர் காலத்துல நடந்த கதை , புத்தரோட சிஷ்யர்கள் இரண்டு பேர் பயணம் செய்துக்கிட்டு இருந்தாங்களாம் , பயணம்ன்னா கார், பஸ் அந்த மாதிரி இல்லை துறவிகளோட தர்ம படி வண்டியில பயணம் செய்ய மாட்டாங்க , எங்க போனாலும் கால்நடையா தான் போவாங்க

       இப்படி போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு ஆற்றை கடந்து போக வேண்டி இருந்தது , அந்த ரெண்டு துறவில ஒருத்தர் வயசான ஆளு , இன்னொருத்தர் இளம் துறவி அதாவது நம்ப மொழில சொன்னா ஒருத்தர் சீனியர் , இன்னொருத்தர் ஜூனியர் ஆற்றை கடந்து போக தயாராகும் போது ஒரு இளம் பெண் அங்க வந்து அந்த துறவிங்க கிட்ட கேட்டாங்க ஐயா நானும் அடுத்த கரைக்கு போகனும் , என்ன அடுத்த கரைல விட முடியுமான்னு.

       உடனே இளம் துறவி எதுவும் பேசாம அந்த பெண்ணை தோள் மேல உக்கார வச்சிக்கிட்டு ஆத்துல இறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டாரு , மூத்த துறவிக்கு கோபமா வந்தது அத வெளிக்காட்டிக்காம அவரும் ஆத்துல இறங்க மூணு பேரும் அடுத்த கரைக்கு போய் சேர்ந்தாங்க .

    இந்த நிகழ்வுக்கு பிறகு , ரெண்டு நாளா மூத்த துறவி நிம்மதியா இல்லாம் மன உளச்சலுக்கு ஆளானா மாதிரி இருந்தாரு கடைசில அந்த இளம் துறவிக்கிட்ட , நீ எப்படி அந்த பெண்ண தோள் மேல தூக்கலாம் , இது துறவிங்களுக்கு அழகா, நம்ப மடத்துக்கு தெரிஞ்சா என்ன ஆகும், அப்படி ,இப்படின்னு இளம் துறவிய கடிச்சி துப்பாத குறையா திட்டினாரு , பொறுமையா கேட்ட இளம் துறவி ,மூத்த துறவிய பார்த்து சொன்னானாம்

  நான் அந்த பொண்ண ரெண்டு நாளைக்கு முன்னாடியே ஆத்தங்கரையிலேயே விட்டு வந்துட்டேன், நீங்க தான் ரெண்டு நாள மறக்காம மனசுக்குள்ள தூக்கிட்டு வந்து இருக்கீங்க, 

அந்த சம்பவம் நடந்த போது நாம மூணு பேர் மட்டும் தான் இருந்தோம், அந்த பெண்ணும் அங்கேயே இறங்கிடுச்சி, இப்ப நாம ரெண்டு பேருக்கு மட்டும் தான் இந்த விசயம் தெரியும் , வெளியுலகத்துக்கு சொன்னா நீங்க, இல்ல நான் தான் சொல்லனும்

போய் வேலையப்பாருங்கன்னு சொன்னானாம் இளம் துறவி

இப்ப தெரியுதா இவங்கள்ளா யாரு சீனியர் , யாரு ஜூனியர்ன்னு !

Wednesday, December 14, 2011

கண்ணாயிரம் எனது புதிய நண்பன்

     நண்பர் ஒருத்தர் போன்ல ஒரு அட்ரஸ் சொல்லி நான் இங்க தான் இருக்கேன் , வந்துடுங்கன்னு சொன்னாரு,  அவரு சொன்ன அட்ரஸ்ல போனா வாசல்ல எழுதியிருந்த பெயர் பலகை என்னை வியப்பில் ஆழ்த்தியது !

    கேட்ல நண்பர் பேரை சொன்ன உடனே கேட் திறந்து,  சார் லெப்ட்ல போய்ட்டு இரண்டாவதா வரும் பாருங்க அது தான் ஆபீஸ் ரூம்ன்னு சொன்னார் கேட்ல இருந்தவரு , அவருக்கு நான் நன்றி சொல்லிட்டு நண்பரை தேடிப் போனேன்,

    நண்பரும் இன்னொருவரும் பேசிட்டு இருந்தாங்க , ரெண்டு பேருக்கு வணக்கம் சொல்லிட்டு , நான் சொல்லுங்க சார்ன்னு சொன்னேன் , சார் இவருக்கு ஒரு கம்பியூட்டர் வேணுமாம் நல்லதா ஒன்னு பார்த்து கொடுங்க , விலையும் கம்மியா இருக்கனும் சொன்னாரு .

     அதுக்கு என்ன தாராளமா கொடுத்துடலாம்ன்னு சொல்லிட்டு அத பற்றி பேசி முடிச்ச பிறகு , மணி அடிக்கிற சத்தம் கேட்டது . நண்பர் சொன்னரு ஸ்கூல் பெல் அடிச்சிட்டாங்க வாங்க வெளில போய் பசங்கள பார்த்துட்டு வரலாம்ன்னு சொன்னார்.

    பசங்க ஒரே கூச்சல் ,  4 பேரா, 3 பேரா,  தோள் மேல கைய போட்டுக்கிட்டு போறத பாக்கும் போது எனக்கு வியப்பா இருந்தது , தனி தனியாவும் பசங்க விளையாடிட்டு இருந்தாங்க , அவங்கள பார்த்து ஒருத்தர் அப்ப அப்ப எச்சரிக்கை பண்ணிட்டு இருந்தாரு. புது கட்டிடம் கட்டிக்கிட்டு இருக்கிற இடத்துக்கு யாரும் போகாதீங்கன்னும் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

    ஆற்று மணல்ல பசங்க விளையாடறத பாக்கும் போது எனக்கும் அவங்க கூட விளையாடனும் போல இருந்தது, மொத்தம் ஒரு 25 - 30 பசங்க இருந்தாங்க , ஒருத்தன் மட்டும் யார் கூடவும் சேராம ஒரு மரத்த பிடிச்சிக்கிட்டு நின்னுட்டு இருந்தான் ,

தம்பி நீ விளையாட போகலியான்னு கேட்டேன் , இல்ல சார்ன்னு சொல்லிட்டு , நீங்க இங்க புதுசா இன்னைக்கு தான் வறீங்களான்னு சார்ன்னு கேட்டான் , ஆமாம் தம்பின்னு சொன்னேன்.

    சார் நான் கிறிஸ்மஸ்க்கு ஊருக்கு போக போறேன்னு சொன்னான் . அவன் வீட்டுக்கு போறத, அறிமுகம் இல்லாத என்கிட்ட சொல்லும் போது அவன் முகம் சந்தோசத்துல திளைச்சது . அப்ப தான் ஞாபகம் வந்தது அந்த ஸ்கூல்ல ஹாஸ்டல் இருக்கிற விசயம்.

    தம்பி சாப்ட்டியா , இல்ல சார் 2 மணிக்கு தான் சாப்பாட்டு நேரம்ன்னு சொல்லிட்டு , சார் நீங்க வண்டி வச்சியிருக்கீங்களான்னு கேட்டான் , ஆமாப்பா 2 வீலர் பஜாஜ் டிஸ்கவர்ன்னு சொன்னேன் . அவன் உடனே என்ன சிசி சார் உங்க வண்டின்னு கேட்டான் ,  நான் 135 சிசி தம்பின்னு சொன்னேன்,

    சார் என்னைய அந்த வண்டியில உக்கார வச்சி ஒரு ரவுண்ட் அடிப்பீங்களா, இது வரைக்கும் வண்டில நான் போனது இல்ல சொல்ல , எனக்கு பரிதாபமா இருந்தது நான் நண்பர கைய சீண்ட , அவர் கூட்டிட்டு போங்கன்னு சொன்னரு,  அவன வண்டியில ஒரு ரவுண்ட் அடிக்க அவன் போட்ட சந்தோச கூச்சலும் , ஆரவாரமும்,  எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ஆயிடுச்சி.

    ஒரு ரவுண்ட் முடிந்ததும், அந்த தம்பி வண்டிய விட்டு இறங்கி சார் ரொம்ப நன்றி சார், உங்கள நான் மறக்க மாட்டேன்,என் ப்ரண்டுகிட்ட எல்லம் சொல்லுவேன்னு சொன்ன பிறகு ,உங்க பேர் என்ன சார்ன்னு கேட்டான். தம்பி என் பேரு கேசவன் , உன் பேர் என்ன ? என் பேரு கண்ணாயிரம் சார். பேரை கேட்டவுடன் இதயம் கனத்தது

    சரி கண்ணாயிரம் நான் திரும்பவும் வரும் போது , உன்ன வெளியில ஒரு நாள்கூட்டிட்டு போறேன் சொன்ன உடனே அவன் முகத்துல 1000 வாட்ஸ் பிரகாசம் . அவனுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு நண்பருக்கும் சொல்லிட்டு வெளியே வந்தேன் .

    கேட்ல இருக்குறவர் வண்டி சத்தம் கேட்டுட்டு கேட்ட திறந்து விட்டு ஒரு வணக்கம் வச்சாரு அவருக்கு சத்தமா ஒரு வணக்கம் சொல்லிட்டு,  வெளியில வந்து வண்டிய நிறுத்தி , உள்ள நுழையும் போது பார்த்த அந்த பெயர் பலகை திரும்பி ஒருதரம் பார்த்தேன்.

பார்வை இழந்தோர் உண்டுஉறைவிடப்பள்ளி 

மனதில் நினைத்துக்கொண்டேன் அடிக்கடி இந்த பள்ளிக்கு வரவேண்டும் என்று 


டிஸ்கி :
              இது ஒரு உண்மை கதை.

              இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் , 
              பார்வை இழந்தவர்கள் , என்னை தவிர 
             

Friday, December 9, 2011

” ஹப் ” இதுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?!

     வண்டிய எடுக்கும் போது தெரியாம போச்சு இந்த வண்டி இந்த அளவுக்கு இன்னைக்கு அடி வாங்க போகுதுன்னு , நானும் தான் !

    நண்பர் ஒருவர் நிலம் வாங்கும் விசயமா கூப்பிட்டு இருந்தாரு , 20 கி.மீ தூரத்துல இருக்கிற ஒரு ஊர் கிட்ட வந்துடுங்க போகலாம்ன்னு சொன்னாரு . சரி நான் வெட்டியா உட்கார்ந்துகிட்டு இருக்கிறது இவருக்கு தெரிஞ்சி போச்சு, போகலனைன்னா நல்லா இருக்காதுன்னிட்டு வண்டில கிளம்பிட்டேன்.

    இது வரைக்கு அந்த ஊருக்கு நான் போனது இல்ல , இது தான் முதல் தடவை , 10 கி.மீ தாண்டி போயிட்டு இருந்தேன், திடீர்ன்னு ஒருத்தன் வண்டி குறுக்கால வந்து நின்னான். வண்டிய நிறுத்தி ஏண்டா வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா திட்டினேன், இல்லைனே இனிமே தான் சொல்லனும்ன்னான், எனக்கு இன்னும் கோவம் அதிகமாயிடுச்சி .

      பக்கத்துல இருக்கிற வீட்ல ஒருத்தர் காலமாயிட்டாரு , அத சொல்லத்தான் போயிட்டு இருக்கேன். என்னை அந்த ஜங்சன்ல விட்டுங்க, கடைசி பஸ் அத பிடிக்கனும்ன்னு சொன்னான் ,  வழக்கமா நான் யாருக்கும் லிப்ட் கொடுக்கிறது இல்ல . முடியாதுன்னு சொன்ன , என்ன தள்ளிவிட்டு அவன் வண்டிய ஓட்டிட்டு போயிடுவான் போல இருந்தான்.

   என்ன ஏதுன்னு கேக்காமலேயே பின்னாடி ஏறி உட்கார்ந்துட்டு சார் போங்க சார் சீக்கிரம் , வண்டி போயிட போகுதுன்னு உத்தரவு போட்டான். நானும் எதுவும் பேசாம ஒரு உதவியா நினைச்சுக்கிட்டு வண்டிய கிளப்பினேன். 

           கொஞ்ச தூரம் போகல சார் சீக்கிரம் போங்க சார் , நான் நடக்கிற வேகத்துக்கு வண்டிய ஓட்டிட்டு இருக்கீங்கன்னு சொல்ல , நான் கோபமாகி தம்பி வேணும்னா நீ இறங்கி நடந்து போ , வேகமா என்னால ஓட்ட முடியாதுன்னு சொன்னேன். சார் கோவிச்சிகாதீங்க , பஸ் போயிடும் அதனால தான் அப்படி சொன்னேன்னான் , எனக்கும் கொஞ்சம் பரிதாபமா தான் இருந்தது .

       தம்பி இந்த ஏரியாக்கு நான் புதுசு , ரோடு எப்படி இருக்குன்னு தெரியாது , அதனால வேகமா போகமுடியாதுன்னு நான் சொல்ல ,  அதுக்கு அவன், நான் சொல்றேன் நீங்க ஓட்டுங்க சார்ன்னு சொன்னான். 

      வண்டி ஒரு 60 கி.மி. வேகத்துல போயிட்டு இருந்தது , சார் ”ஹப்” “ஹப்” சார் னான், நானும் வேகத்த கூட்டி ஒரு 70 க்கு வந்தேன் , அவன் திரும்பவும் சார் “ஹப்” ”ஹப்” கத்த , நான் திரும்பவும் வேகத்த கூட்ட, 80 கி.மி. வேக முள்ளு காட்டுச்சி , 

         வண்டி திடிர்ன்னு பறக்கறா மாதிரி ஒரு உணர்வு அவ்வளவு தான் தெரியும் வண்டி எங்களுக்கு முன்னாடி சங்கு சக்கரம் சுத்தறா மாதிரி சுத்திக்கிட்டு இருக்குது. ரெண்டு பேரும் தார் ரோட்டுல உருண்டுக்கிட்டு இருந்தோம் 
  
    ரெண்டு பேருக்கும் கை, கால் முட்டியேல்லாம் ஒரே சிராய்ப்பு , அவன் பின்னாடி உட்கார்ந்து இருந்ததால அவனுக்கு அடி அதிகம் , எனக்கு அந்த வண்டி பம்பர் கொஞ்சம் புண்ணியம் கட்டிக்கிச்சு 


      கோவமா அவன்கிட்ட போய் கேட்டேன் ஏண்டா நான் தான் இந்த பக்கம் முதல் தடவையா வரேன் , நீயாவது சொல்ல கூடாதா ” இங்க ஸ்பீட் பிரேக்கர்”  இருக்குதுன்னு நான் கத்த ,

  அவன் முனகிகிட்டே சார் நான் தான் “ஹப்”  “ஹப்” ன்னு கத்திக்கிட்டே வந்தேனே சார்! சொல்ல , 

                டேய்”ஹப்ன்ன”  உங்க ஊர்ல ஸ்பீட் பிரேக்காடா...

     செய் கூலி இல்லை ஆனா சேதாரம் தான் அதிகம் 


Monday, November 28, 2011

மயக்கம் என்ன.? -சினிமா விமர்சனம் அல்ல


   காலைல ராசி பலன்ல சந்த்ராஷ்டமம்னு பாத்த உடனேயே உஷாராயிருக்கனும். ஆனா, வெவரம் பத்தாம வீட்டுக்காரம்மாகிட்ட வாங்கிக் கட்டறதுதான நம்ம பொழப்பே.!

   கடைலகூட பொண்ணுகள வேலைக்கு வச்சிக்கக் கூடாதுங்கறது அம்மிணி ஆர்டர். எல்லாம் நம்ம ஜொள்ளு விடறது தெரிஞ்சுதான். நம்ம மேல அவ்வளோ நம்பிக்கை.

  இன்னிக்கு காலைல கிளம்பும்போதே பக்கத்து ஃப்ளாட் ஏஞ்சல்,"அங்கிள் போற வழிலதான எங்க காலேஜ். என்னை கொஞ்சம் ட்ராப் பண்ணிடறீங்களா.?"-னு ஓடிவந்தா.

   'என்னடா கன்னிராசி இன்னிக்கு வொர்க் அவுட் ஆகுதே'-னு பாத்தா ஜன்னல்ல வூட்டுக்காரம்மா ஆட்டுன பூரிக்கட்டய பாத்ததும், "இல்லம்மா இன்னிக்கு மார்க்கட்ல கலக்சன் இருக்கு"-னு பொய் சொல்ல வேண்டியதாப் போச்சு.

   கிளம்பி மெயின் ரோட் சிக்னல்ல நின்னு கெளம்பும்போது தான் கவனிச்சேன், முன்னாடி போற ஸ்கூட்டில பொண்ணோட துப்பட்டா பின்வீல்ல மாட்டறா மாதிரி இருந்ததை.

   எச்சரிக்கலாம்னு ரெண்டுமூணு திருப்பமா துரத்திகிட்டுப் போயி, ஸ்கூட்டிய ஒருவழியா ஓவர்டேக் எடுத்து, "இந்தாம்மா..." என்று சொல்ல வாயெடுத்த போதுதான் அது நடந்தது.

   ”டமார்” ன்னு ஒரு சத்தம் வண்டி எதுலயோ மோதி நான் மயக்கம் போட்டிருந்தேன்.

      கண் விழிக்கும் போது ஏதோ ஹாஸ்பிடல் படுக்கையில் கிடந்தது தெரிந்தது.
அந்த ஸ்கூட்டி துப்பட்டா பொண்ணு யாருடனோ முதுகைக் காட்டிய படி, செல்லில் பேசிக்கொண்டிருந்தாள்.

   "கொஞ்ச தூரமாவே என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தாரு. நான் கொஞ்சம் பயந்துட்டேன். வண்டிய வேகமா ஓட்டிட்டு போக ட்ரை பண்ணினா, அப்பவும் வேகமா துரத்திட்டு வந்து ஏதோ சொல்ல ட்ரை பண்ணாரு. 



    அப்பத்தான் எதிர வந்த வண்டி மோதி இப்படி ஆயிடுச்சு. ஆமா, மம்மி ஹாஸ்பிடல் தான். வாங்க..!"-னு அவ ஃப்ரண்ட் யாருகிட்டயோ சொல்லிகிட்டே திரும்பும் போதுதான் பார்த்தேன். யப்பா... அப்படி ஒரு அழகி. வலியையும் தாண்டி பிரமிக்க வைக்கும் பேரழகு.


  ஃபோனை கட் செய்தபடி திரும்பியவள், நான் கண் விழித்திருப்பதை பார்த்ததும் சிரித்தபடி சொன்னாள்.

    "முழிச்சுட்டீங்களா.? இப்பத்தான் உங்க வீட்ல பேசிட்டு ஃபோனை கட் பண்றேன்.!" என்று அவள் சொல்லும் போதுதான் கவனிச்சேன். அவள் கையிலிருந்தது என் மொபைல்.

   அடி சண்டாளி... என் வைஃப்கிட்டயா இவ்வளவு நேரம் ஃபாலோ பண்ணாரு, ஏதோ சொல்ல டரை பண்ணாருனு விளக்கம் சொல்லிட்டிருந்த.? அய்யோ, இந்நேரம் என் வீட்லருந்து அவ எப்படி கிளம்பிட்டிருப்பானு நினைக்கும் போதே , எனக்கு எதுவும் மோதாமலேயே இன்னொரு தடவை மயக்கம் போட்டுட்டேன்.!

      செய்கூலி இல்லை ஆனா சேதாரம் தான் அதிகம் 

Thursday, November 24, 2011

நாங்களும் பிரபல ப்ளாக்ரா ஆவோம்ல

         நானும் ப்ளாக்கராயிட்டேன் , நானும் ப்ளாக்கராயிட்டேன் , கேட்டுக்கோங்க , சும்மா கிடந்த தேரை இழுத்து இப்படி நடு தெருவுல விடுவாங்கன்னு நினைச்சுக்கூடப்பாக்கல , இந்த வேதாளம்(ட்விட்டர்)  இருக்கானே அவன் கூட ஒரு நாள் மப்புல பேசிட்டு இருக்கும் போது அண்ணே நீங்க ஏன் ப்ளாக் எழுத கூடாதுன்னு கேட்டான். தம்பி அந்த அளவுக்கு அண்னன் வொர்த் இல்ல சும்மா சாம்பிராணி போடாதன்னு சொன்னான், சரி அவனுக்கு தெளிஞ்சா சரியாயிடும்ன்னு விட்டுட்டேன்.


          ஏற்கனவே ஒரு ஐந்து வருசத்துக்கு முந்தி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி அந்த ப்ளாக்காரனே கடுப்புல அதை ப்ளாக்(Block)  பண்ணுவான்னு நினைக்கல,  பின்ன பிட்டு படத்த ப்ளாக்ல போட்டா எவன் தான் ப்ளாக் (Block )பண்ணாம இருப்பான். 


                            சரி மேட்டருக்கு வருவோம்,  மேட்டர்ன்னா அது இல்ல ஜொள்ளு விட வேணாம். நான் சொன்னது இந்த விசயத்துக்கு வருவோம்ன்னு, சரி எழுத ஆரம்பிச்சா குறைந்தது ஒரு நாலு பேராவது புகழனும், இல்ல துப்பனும் , பிள்ளையார் சுழி போட்டு இருக்கேன், அதுக்காக ஆன்மீக ப்ளாக்கரா என்னை பாத்துடாதீங்க , நான் என்ன எழுத போறனோ , யார் யாருக்கு டரியல் ஆகப்போகுதோ தெரியாது , பொறுமையா என் பின்னாடி வாங்க 

                          செய் கூலி இல்லை சேதாரம் உண்டு